logo
முதல்வர் மருந்தகம்

திட்ட விவரம்

  • D.Pharm அல்லது B.Pharm படிப்பினை முடித்து மருந்தாளுனராக உரிமம் பெற்ற தொழில் முனைவோர்கள் முதல்வர் மருந்தகத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம், சான்றிதழ் இல்லாமல் இருப்பின் மேற்கண்ட உரிமம் பெற்ற நபரின் இசைவுக் கடிதத்தை பெற்று சமர்பிக்க வேண்டும்.
  • கூட்டுறவுச் சங்கங்களும் இதில் விண்ணப்பிக்கலாம்
  • முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும்
  • கடன் பெற விருப்பம் உள்ள தொழில் முனைவோர்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் பெற வசதிகள் செய்துதரப்படும்.
  • சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழியில் பரிசீலிக்கப்படும்.

மருந்தாளுநர் தொழில்முனைவோர் தேவைகள்

தகுதி
  • மருந்தாளுநர் பாடநெறி நிறைவு சான்றிதழ்
  • மருந்தக தொழில் மன்ற பதிவு சான்றிதழ்
  • மருந்தக மன்ற அடையாள அட்டை மற்றும் பிற சான்றிதழ்கள்இடம்
இடம்
  • வாடகை ஒப்பந்தம் / குத்தகை ஒப்பந்தம்
  • ஒப்புதல் கடிதம் (NOC)
  • சொந்த சொத்து விவரங்கள் (சொத்து வரி, மின்சாரம் பில், நீர் பில்)
கருத்தரங்க தகுதி
  • மருந்தக அனுமதி படிவங்கள் (படிவம் 20, 21, 19)
  • அனுபவ சான்றிதழ்
  • விவரமான திட்ட அறிக்கை (DPR)
  • வங்கி கணக்கு விவரங்கள்
  • ஜிஎஸ்டி சான்றிதழ், பான்
  • இருப்பில் ஏற்கனவே கடன் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலை (வங்கி NOC)
  • முந்தைய கடைகளில் இருந்து கிடைத்த ஒப்புதல் / நடத்தை சான்றிதழ்

வழிமுறைகள்

  • விண்ணப்பதாரர் பார்மசி கவுன்சிலில் சான்றிதழ் பதிவு செய்திருக்க வேண்டும்
  • மருந்தகத்திற்கு தேர்வு செய்யப்படும் இடம் பொது மக்கள் எளிதில் அனுகும் இடமாக இருக்க வேண்டும்
  • மருந்தாளுனர் தனது சொந்தக் கடையாக இருந்தால் சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலையும் அல்லது அது வாடகைக் கடையாக இருந்தால் குத்தகை / வாடகை ஒப்பந்தமும் மருத்தகம் துவங்க தடையின்மை சான்றிதழும் சமர்ப்பிக்க வேண்டும்
  • மருந்தகத்தில் அனைத்து வகையான உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பும் அமைத்திருக்க வேண்டும். (மருந்து அலமாரி, குளிர்சாதன பெட்டி, ஏ/சி, பில்லிங் சிஸ்டம், கண்ணாடி கதவு, பெயர் பலகை மற்றும் இதர)

முன்னுரிமை காரணிகள்

  • ஒரே இடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படின் கீழ்க்கண்ட முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்கள்
  • 1. சொந்த இடம் வைத்திருப்பவர்
  • 2. பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய இடம்
  • 3. பெண்கள் / ஆதரவற்றவிதவைகள்/ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
  • 4. D.Pharm Or B. Pharm படிப்பினை முடித்த தொழில் முனைவோர்கள்
  • 5. ஜெனரிக் மெடிசன் மருந்தகம் அருகில் இல்லாத இடம்